தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கும் இடையில் தான் போட்டி நிலவும் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பு தொடர்பாக சுப்ரமணியன் சுவாமி தனது ருவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
“ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற கேள்விகள் முடிவுக்கு வந்தது.
தமிழகத்தில் ரஜினிகாந்த் மற்றும் சசிகலாவுக்கு இடையே போட்டி நிலவும்; பாஜக குழப்பமான நிலைக்கு செல்லும்” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.