தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்காதது பெரும் தவறு என அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழீழவிடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு என்பதை மன்னித்த மகிந்த ராஜபக்சவின் அனுதாபம் இன்று அழிவாக மாறியுள்ளது.
ஜேர்மனியின் ஹிட்லர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவரது அரசியல் கட்சி முற்றாக அழிவடைந்தது. அதுபோன்று கூட்டமைப்பிற்கும் முடிவு கட்டியிருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.