தொண்டைமானாறு நீரேரியில் இருந்து வெள்ள நீரைக் கடலுக்குள் வெளியேற்ற முடியாதிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
புரெவி புயலினால் பெய்த கடும் மழையினால் தொண்டைமானாறு நீரேரியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், அச்சுவேலி – தொண்டைமானாறு வீதி முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்த நிலையில், நீரேரியில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றுவதற்காக, தொண்டைமானாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
எனினும், கடல் மட்டம் உயர்ந்துள்ளதால், நீரேரியில் இருந்து வெள்ள நீர் கடலுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.