நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் 52 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர்கள் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் அனுரகுமார திஸாநாயக்கவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் இருக்கும் சிறைச்சாலைகளில் மொத்தமாக 28 ஆயிரத்து 541 கைதிகள் இருக்கின்றனர்.
அவர்களில் 27ஆயிரத்து 23 பேர் விளக்கமறியல் கைதிகளாகும். அதில் 7ஆயிரத்து 818 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்களாகும்.
அதேபோன்று மஹர சிறைச்சாலையில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரண்டாயிரத்து 891பேர் இருந்துள்ளனர்.
அவர்களில் 20 ஆயிரத்து 59 பேர் விளக்க மறியல் கைதிகள். 732 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
மேலும் கடந்த 2 ஆம் திகதியாகும் போது மஹர சிறைச்சாலை கலவரத்தினால் 11 பேர் மரணித்துள்ளதுடன் 106 பேர் காயமடைந்துள்ளனர்.
2 அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு போதனா வைத்தியசாலை மற்றும் மஹர சிறைச்சாலை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.