கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் பிராந்தியங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு இத்தாலி அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் டிசெம்பர் 21ஆம் நாளில் இருந்து, ஜனவரி 6ஆம் நாள் வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எமது பாதுகாப்பை விட்டுக் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள இத்தாலிய பிரதமர், அடுத்த ஜனவரி மாதம் வரக் கூடிய கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து தப்பிக் கொள்ள வேண்டியது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.