யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள, பருத்தித்துறைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
உறவினர் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று, ஒரு மாதம் தங்கியிருந்து விட்டுத் திரும்பிய 34 வயதுடைய குடும்பத் தலைவருக்கே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை – ஓடக்கரையைச் சேர்ந்த குறித்த தொற்றாளர், கொழும்பு சென்று திரும்பிய பின்னர் 14 நாள்களாக சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து, அவரது மாதிரிகள் நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே, தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.