பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நிலையை காரணம் காட்டி, நீதிமன்றில் பிணை அனுமதி பெற்று சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.
எனினும், அவர் நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கியுள்ளார்.
இந்த நிலையில், இரண்டு ஊழல் வழக்குகளில் விசாரணைக்கு முன்னிலையாகும்படி, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு பலமுறை அழைப்பாணை அனுப்பிய போதும் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இந்த ஊழல் வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, நவாஸ் ஷெரிப்பை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.