பியர்சன் வானூர்தி நிலையம் வழியாக திரும்பும் பயணிகள் மீது அமுல்படுத்தப்பட்ட 14 நாட்கள் தனிமைப்படுத்தலை அகற்றுவதற்கு விரும்புவதாக ஒன்ராரியோ முதல்வர் டக் ஃபோர்ட் (DUG FORD) தெரிவித்துள்ளார்.
அல்பர்ட்டாவில் என்ன செய்கிறார்கள் என்பதைப் போலவே எமது மாகாணத்திலும் பின்பற்றவிரும்புகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அல்பர்ட்டா வின் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படாத முன்னோடித் திட்டம் தற்போது சர்வதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றது. அதாவது, வானூர்தி நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேறிய பின்னரே பரிசோதனைகள் இடம்பெறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்க ளின் முடிவுகள் எதிர்மறையாக வந்தால் குறைந்த காலத்திற்குத் தனிமைப்படுத்த முடியும் எனவும் கூறினார்.