புரவி புயலின் போது, பொன்னாலை கடலில் காணாமல்போன மீனவர் காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போயிருந்த மீனவரின் சடலம், நேற்று இரவு 8.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த 37 வயதுடைய, செல்வராசா செல்வகுமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் ஊரி பகுதியில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கடலில் சடலத்தை அவதானித்து, கிராம அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காரைநகர் ஊரி கடற்றொழிலாளர்களும் உறவினர்களும் இணைந்து கடலில் மிதந்த சடலத்தை கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.