யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கவும், அணுசக்தி தளங்களில் ஐ.நா. ஆய்வாளர்களை தடுக்கவும் ஈரானில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது,.
ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா 2 மாதங்களில் விலக்கிக் கொள்ளா விட்டால், 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு வகை செய்யும் சட்டம் ஈரானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் ஐ.நா. ஆய்வாளர்கள், ஈரான் அணுசக்தி தளங்களை பார்வையிடுவதையும் தடை செய்யும் வகையில் அமைந்துள்ளது.
ஈரானின் அணு விஞ்ஞானி கொலை செய்யப்பட்ட பின்னர், யுரேனிம் செறிவூட்டலை அதிகரிக்கும் சட்டத்தை ஈரான் நாடாளுமன்றம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்த சட்டத்தை எதிர்ப்பதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இது நாட்டின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.