வங்கக்கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை அருகே, நேற்று இரவு கரை கடந்த இந்தப் புயல், மன்னார் வளைகுடா வழியாக பாம்பனை நெருங்கியது.
தற்போது புரெவி புயல் வலுவிழந்த நிலையில், பாம்பனுக்கு தென்மேற்கே 20 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த புயல், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றெழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ராமநாதபுரம், தூத்துக்குடி அருகே கரையை கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தி்ல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.