இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா நிலவரம் குறித்து மெய்நிகர் முறையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைவோம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
இந்த உலகமே பாதுகாப்பான மற்றும் விலை குறைவான தடுப்பூசி மருந்தை பெறுவதில் கவனம் செலுத்துகிறது.
அதனால்தான் உலக நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் தீவிரமான உடல் நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்றும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.