புரெவி புயலுக்குப் பின்னர், நீடித்து வரும் தொடர் மழை, காற்று மற்றும் வெள்ளத்தினால், யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா இன்று காலை வெளியிட்ட தகவல்களின்படி, இதுவரை 17 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 57 ஆயிரத்து 513 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களில், 959 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 393 பேர் 38 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், இயற்கை அனர்த்தங்களால், 62 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 535 வீடுகள் பகுதியாகவும், சேதமடைந்துள்ளன என்றும், யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.