உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனா தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் (Tetras Adanam Capriases) கேட்டு கொண்டுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு கிடைக்கும் தீர்வானது, உலக பொது பொருளாக கொண்டு சமமுடன் பகிரப்பட வேண்டும். அதற்கு பதிலாக தனிப்பட்ட நபருக்கான பொருட்களாக பயன்படுத்தப்பட கூடாது எனவும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் சமீப வாரங்களில் வரவேற்கத்தக்க முடிவுகள் காணப்படுகின்றன. இவை சுரங்க முடிவில் காணப்படும் வெளிச்சம் போல் பிரகாசமுடன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஏழை மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களை மிதிக்க கூடிய உலகை நாம் ஏற்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்