கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தித் தரத் தவறுகின்ற பட்சத்தில் அதைப் பெறுவதற்கான போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்ட கணக்காளர் கடந்த வாரம் கடமைக்கு வந்திருந்தார். பின்னர் அவரைக் காணக் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
காரைதீவில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கல்முனை பிரதேச செயலகம் அரசாங்கத்தால் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இனவாத அரசியல்வாதிகளே தொடர்தேச்சையாக பல வழிகளிலும் முட்டுக்கட்டைகள் போட்ட வண்ணம் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.