சமஷ்டி அரசு கொரோனா தடுப்பூசிகளின் கொள்வனவு அளவை அதிகரித்துள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைவாக மொடர்னா நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவை 56மில்லியனாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனத்திடமிருந்து ஆரம்பத்தில் 20மில்லியன் வரையில் பெறுவதாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தினை இரட்டிப்பாக்கி உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்மூலம் கனடியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்