தமது பதவியேற்பு விழாவுக்கு டொனால்ட் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கவுள்ளாக, ஜோ பைடென் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடென் பதவியேற்க உள்ளார்.
இந்த நிகழ்வுக்கு, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முறையில் தனக்கும் ஜனாதிபதி டிரம்புக்கும் எந்த பகையும் இல்லை என்றும் கொள்கை ரீதியாகவே தாங்கள் மோதிக் கொள்வதாகவும் ஜோ பைடென் கூறியுள்ளார்.
இதனால் பதவியேற்பு விழாவுக்கு ட்ரம்புக்கு வரவேற்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.