புயல் மழையால் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்ய மத்தியக் குழுவானது இன்று சென்னை சென்றுள்ளது.
இந்தக் குழு இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.
தமிழகத்தில் நிவா், புரவி உள்ளிட்ட புயல்கள் ஒட்டுமொத்த மாநிலத்திலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், கால்நடைகளும் பலியாகியுள்ளன.