பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணொருவர் தான் இறந்துவிட்டதாக பொய்யான சான்றிதழை சமர்பித்து, அந்நாட்டு மதிப்பில் 23 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீமா கர்பாய் (Seema Karbai) என அழைக்கப்படும் குறித்த பெண், கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்குச் சென்று காப்பீடு திட்டங்களை எடுத்துள்ளார்
தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு சீமா (Seema) இறந்துவிட்டதாகக் கூறி, அவரது பிள்ளைகள் சான்றிதழை சமர்பித்து காப்பீட்டு பணத்தை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பெண் உயிருடன் உள்ளதாகவும், இதுவரை 5க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அமெரிக்க நிறுவனங்கள் அளித்த தகவலின் பேரில் பாகிஸ்தான் விசாரனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.