பிரான்ஸிலுள்ள விஜய் மல்லையாவின்1.6 மில்லியன் யூரோ மதிப்புள்ள சொத்துக்களை அமுலாக்கத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபா மோசடி செய்தது தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை அமுலாக்கத்துறை பறிமுதல் செய்து வருகிறது.
அந்தவகையில் பிரான்ஸின் ஃபாஷ் என்ற இடத்தில் 32 ஆவது அவென்யூவிலுள்ள சொத்து ஒன்றைக் கண்டறிந்த அமுலாக்கத்துறை அதனை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.