வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோ ஷிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
இன்றையதினம் அவருடைய பிரதேச சபை அலுவலகத்திற்கு சென்றிருந்த காவல்துறையினர் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.
அங்கயன் இராமநாதன் தலைமையிலானவர்கள் அடிக்கல்லை நாட்டி வைத்து அங்குரார்ப்பணம் செய்து வைத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையை அகற்றியமை தொடர்பிலேயெ இந்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. இதேநேரம், பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை புனரமைப்பதற்கு அடிக்கல் நாட்டியமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முகமாகவே பெயர்ப்பலகை அகற்றப்பட்டதாக தவிசாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.