17 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்களை ரொரண்டோ காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு தனித்தனி விசாரணைகளில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதனையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வாகனை சேர்ந்த 23 வயது இளைஞரும், எட்மண்டனைச் சேர்ந்த 26 வயது இளைஞருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
சுமார் 150 கிலோகிராம் படிக மெத், கொகோயின், ஃபெண்டானில் மற்றும் ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும், இதன்போது, இரண்டு துப்பாக்கிகளையும் சுமார் அரை மில்லியன் டொலர்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.