1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றபோது, பாகிஸ்தான் செய்த அட்டூழியங்களை மறக்க முடியாது என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட காயங்கள் வலி நிறைந்த, மறக்க முடியாத சம்பவங்கள் மனதை உலுக்குகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் சுதந்திரத்தின்போது நடந்த சரித்திர நிகழ்வுகளை மையமாகக் கொண்டு ஷேக் முஜிபூர் ரகுமான் எழுதிய ‘அன்பினிஷ்ட் மெமோர்ஸ்’ (unfinished memories) என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றிய போதே, பிரதமர் ஷேக் ஹசீனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.