2021 மனிதாபிமான பேரழிவாக காணப்படப்போகின்றதென உலக உணவுதிட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லே (David Beasley) தெரிவித்துள்ளார்.
ஐ.நா. ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உலகம் 2021 இல் மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எங்களால் அனைத்து திட்டங்களுக்கும் நிதி வழங்க முடியாது. இதன் காரணமாக நாங்கள் முன்னுரிமைக்குரிய விடயங்களை தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





