கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருட்களின் பட்டியலில் இருந்து, ஐ நா நீக்கவுள்ளது.
போதை மருந்துகளுக்கான ஐ.நா ஆணையத்தில் கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
எனினும், கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக 27 நாடுகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்பு தெரிவித்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன.