ஒட்டோவாவில் மூவாயிரத்திற்கும் அதிகமான சிரேஷ்ட பிரஜைகளுக்கான பராமரிப்பு உதவியாளர்கள் தொழில்களை இழந்துள்ளனர்.
அண்மைய நாட்களில் நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் நெருக்கடிகளை தவிர்க்கும் வகையிலான மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் அந்த இல்லங்களுக்குள் வெளியிருந்து பிரவேசிப்பவர்கள் அனுமதிக்கப்படாத நிலைமை நீடிகிக்கின்றது.
இந்நிலையில், இந்த இல்லங்களில் உதவியாளர்களாக செயற்படுபவர்கள் தொழில்வாய்ப்புக்களை இழந்து நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளனர்.
இ.தேவேளை, தமது பரமரிப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்புடன் கூடிய சந்தர்ப்பத்தினை அளிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் சிரேஷ்ட பிரஜைகளும், உதவியாளர்கள் இன்றி இயங்குநிலையற்று இருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.