ஒன்ராரியோவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஆயிரத்து 859பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
அத்தடன் 20 மரணங்கள் சம்பவித்துள்ளதோடு ஆயிரத்து 624பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, கியூபெக்கில் 2ஆயிரத்து 31பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதோடு, அல்பேர்ட்டாவில் ஆயிரத்து 879பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மனிடோபாவிலும் 354பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு மேலதிக மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.