கொரோனா தடுப்பூசி சோதனை முடிவுகள் சாதகமாக உள்ளதால், இந்தக் கொடிய தொற்றுநோய் ஒழிந்ததாக, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச் செயலாளர் அதனோம் கேப்ரியாசெஸ் (Tedros Adhanom) தெரிவித்துள்ளார்.
ஐ.நா பொதுச் சபையில் கொரோனா குறித்த முதல் உயர்மட்டக் குழு கூட்டம், மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய, உலக சுகாதார நிறுவனத்தின் பொதுச்செயலாளர்,
“கொரோனா தடுப்பூசி மருந்துகள் நன்கு பலன் அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனால், கொரோனா ஒழிந்தது என, உலக மக்கள் கனவு காணத் தொடங்கலாம்.
கொரோனா தடுப்பூசி மருந்து, அனைத்து நாடுகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும்.
உலக சுகாதார நிறுவனத்தின், திட்டத்தின் கீழ், கொரோனா தடுப்பூசி மருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து நாடுகளுக்கும் சீராக விநியோகிக்கப்படும்.
பணக்கார நாடுகள், தாராளமாக இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.