டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுநோய்க்கான தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் வந்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
விஞ்ஞானிகளின் ஒப்புதலுக்காக தடுப்பூசிகள் காத்திருக்கும் நிலையில், தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பதற்காக டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசிகளை களஞ்சியப்படுடுத்தி வைத்துக் கொள்வதற்கான போதிய வசதி இந்த இரு விமான நிலையங்களிலும் உள்ளதாக கூறப்படுகிறது. மறை 20 டிகிரி முதல் மறை 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை கொண்ட குளிரூட்டப்பட்ட அறைகள் இங்கு உள்ளதால், தடுப்பூசிகளை பாதுகாக்க முடியும் என்றும், ஹைதராபாத் விமான நிலையத்திலும் இதுபோன்ற வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.