பைசர் (Pfizer) மற்றும் பயோஎன்டெக் (Bioendech) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை இந்த வாரம் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா தயாராகி வருகிறது.
பைசர்(Pfizer) மற்றும் பயோஎன்டெக்(Bioendech) ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு கடந்த வாரம் பிரித்தானிய அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் அந்த ஊசி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு இல்ல ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பிரித்தானிய தேசிய சுகாதார சேவை அதிக முன்னுரிமை அளித்துள்ளது.