சிறிலங்காவில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 319 பேர் மினுவாங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 182 பேர் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 166 பேரும் பேலியகொட கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 226ஆக அதிகரித்துள்ளது.





