சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 61 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகள் கூறுகின்றன.
கொரோனா தொற்றினால் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளனர்
இவர்களில், 61 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், 19.35 வீதமும், 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் 47.58 வீதமும் உள்ளடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில், 31 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், 13.7 வீதம் என்றும், 10 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 2.41 வீதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.