ஜனவரி 15ஆம் நாளுக்குள் சோமாலியாவில் இருந்து அமெரிக்கப் படைகளைத் விலக்கிக் கொள்வதாக பென்டகன் அறிவித்துள்ளது.
சோமாலியாவில், உள்நாட்டுப் படைகளுக்கு பயிற்சி அளித்து வருவதுடன், அல்-ஷபாப் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் நாளுக்குள் சோமாலியாவில் உள்ள அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்ளுமாறு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதத் தேவையில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.