சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதி தொடர்பாக, வரும் ஜனவரி முதலாம் திகதி அறிவிக்கப்படும் என்று, அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்று தெரிந்து கொள்ள எல்லோரும் விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் விரைவில் விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.