தமிழக காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் குழு, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் ‘தமிழக காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனவே கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பி.சி.ஆர்.பரிசோதனை செய்துகொண்டு, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது