கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் உள்ள எல்.ஆர்.சி எனப்படும் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரித்தான காணிகளை சட்டவிரோதமாக சிலர் துப்பரவு செய்து வருகின்றமைக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
பேராலையில் உள்ள எல்.ஆர்.சி காணியினை துப்பரவு செய்கின்ற பணிகளை அவதானித்த பொதுமக்கள் இன்று ஒன்றிணைந்து கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
பளை பிரதேசத்தில் பல பொது மக்கள் இன்றும் குடியிருக்க காணியற்று இருக்கின்றனர். பலர் விவசாயம் செய்வதற்கு போதுமான நிலம் இன்றிகாணப்படுகின்றனர்.
இந்நிலையில் எமது கண் முன் உள்ள எல்.ஆர்.சி காணிகளை இந்த மாவட்டத்திற்கு வெளியிலிருந்து வந்த சிலர் தங்களின் உயர்மட்ட செல்வாக்கினை பயன்படுத்தி 50 ஏக்கர்,100 ஏக்கர் என துப்பரவு செய்கின்றனர்.
ஆனால் காணியற்ற நாம் குறைந்தது அரை ஏக்கர் காணியினை எங்களுக்கு தாருங்கள் என்றே கோருகின்றோம் இந்த பிரதேச வறிய மக்களுக்கு வழங்காது வெளியிடங்களைச் சேர்ந்த வசதிப்படைத்தவர்களுக்கு வழங்கப்படுவது கவலைக்குரியது.
ஆகவே இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.