புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் வரும் 10ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் நாட்டப்படவுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
971 கோடி ரூபா செலவில், 64 ஆயிரத்து 500 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டடம், அமையவுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத வகையில் அமைக்கப்படவுள்ளது.
இந்த கட்டடத்தை கட்டும் பணிக்கான ஒப்பந்தம் டாடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது, கட்டுமானப் பணியில் 11 ஆயிரம் பேர், ஈடுபடவுள்ளனர்.
தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தை விட, புதிய கட்டடம், 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பெரியதாக இருக்கும்.
இந்தியாவின், 75ஆவது சுதந்திர தின நாடாளுமன்றக் கூட்டம், புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று நம்புவதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.