வலிந்து காணாமல்போனோரின் குடும்பங்களுக்கான 6 ஆயிரம் ரூபா மாதாந்தக் கொடுப்பனவிற்கான நிதியை வரவு, செலவுத்திட்டத்தில் ஒதுக்கவேண்டும் என்று வலியுறுத்தி, காணாமல்போனோரின் குடும்பத்தினர் ஒன்றிணைந்து இணையவழி மகஜரை வெளியிட்டுள்ளனர்.
காணாமல்போனோர் தொடர்பில் முறையான விசாரணையொன்று நடத்தப்பட்டு அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்படும் வரையில் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவதற்கான திட்டமொன்று அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி கடந்த 2019 நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் இடைக்கால நிவாரணக்கொடுப்பனவு நிறுத்தப்படும்வரை, தமது உறவினர்கள் காணாமல்போனமைக்கான சான்றிதழைக்கொண்டிருந்த 153 குடும்பங்களுக்கு மொத்தமாக 11 மில்லியன் ரூபா இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது.