வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தினைப் பார்வையிடுவதற்குச் சென்ற மாணவன், நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவரைத்தேடும் பணிகள் நேற்றைய தினம் தோல்வி அடைந்திருந்தன.
இந்நிலையில், இன்றும் காலை எட்டு மணி தொடக்கம் கடற்படையினர், காவல்துறையினர், இராணுவம் மற்றும் கிராமத்து இளைஞர்கள் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதும் அம்முயற்சிகளும் வெற்றியளித்திருக்கவில்லை.
இதேவேளை மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் பூநெச்சிமுனை கடற்கரையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்றதாவும், அதில் ஒரு இளைஞனே காணாமல் போயிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.