போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, விவசாய அமைப்புகளுடன் இந்திய மத்திய அரசு நடத்திய 5-ம் கட்ட பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் 10-வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அமைச்சர்கள், நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் விவசாய அமைப்புகளுடன் இன்று பேச்சு நடத்தினர்.
இதன்போது, வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வர அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதும், வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதனால், 5-ம் கட்டப் பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.