கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட, ஹரியானா மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் (CoVaccine ) தடுப்பூசியை, மூன்றாவது கட்ட பரிசோதனையின்போது, அமைச்சர் அனில் விஜ் கடந்த மாதம் 20 ஆம் நாள் தனது உடலில் செலுத்தி கொண்டிருந்தார்.
இந்தநிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், அமைச்சர் அனில் விஜ் கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கோவாக்சின் (CoVaccine ) மருந்து 2 முறை வழங்கப்படும். முதல் மருந்து செலுத்தி 28 நாள் இடைவெளியில் அடுத்த மருந்து கொடுக்கப்படும்.
2 ஆவது முறை மருந்து செலுத்தப்பட்டு 14வது நாளுக்கு பின்னரே, தடுப்பூசியின் திறன் தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.





