கொரோனா தடுப்பு நடவடிக்கையில், ஊழல் நடந்திருப்பதாக கூறி, ஜெருசலேமில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு (Benjamin Netanyahu) எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் இல்லத்தின் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள், பிரதமர் பதவி விலக வேண்டும் என கோசமிட்டனர்.
பிரதமருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தியவாறு, எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன்போது பிரதமர் இல்லத்தினைச் சுற்றி பெருமளவில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்