அணு விஞ்ஞானி ஃபக்ரிசாதே (Fakrisade) படுகொலை செய்யப்பட்டதில் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு இயந்திர துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் ரமஸான் ஷெரீப் (Ramadan Sheriff ) கூறியுள்ளார்.
ஃபக்ரிசாதேவின் (Fakrisade) முகத்தை மாத்திரம் குறி வைத்த வண்ணம் இயந்திர துப்பாக்கி ஒரு இடத்தில் பொருத்தப்பட்டிருந்ததுடன் ஒரு செயற்கைக்கோள் உதவியுடன் இணைய நேரலை மூலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமே ஃபக்ரிசாதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் பயங்கரவாதிகள் எவரும் இருக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
சம்பவம் நடத்த போது ஃபக்ரிசாதேவின்(Fakrisade) மனைவி 10 அங்குலங்கள் தொலைவில் இருந்தபோதிலும், அவர் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.