டில்லியின் ஷகார்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவரை காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 5 பேரில் இருவர் பஞ்சாப் சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் ஜம்மு-காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் இந்த ஐந்து பேரும் ஷகர்பூரில் நடந்த மோதலுக்குப் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் மீட்டுள்ள காவல்துறையினர் அது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.