பிரபல நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணையவுள்ளார்.
தென்னிந்தியாவின், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை விஜயசாந்தி, 1998ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து, மகளிர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் தனிக்கட்சி தொடங்கிய போதும் அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லாத நிலையில், 2009ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய விஜயசாந்தி, 2014ஆம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அதிருப்தி அடைந்துள்ள அவர், இன்று அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணையவுள்ளார்.
விஜயசாந்தி டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமீத் ஷாவைச் சந்தித்து பேசியுள்ளார்.