கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
வங்ககடலில் உருவான புரவி புயல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து வருகிறது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனால் ஒரு இலட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதுடன் கால்நடைகளும் குறித்த அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளன. இந்நிலையில் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது