கண்டி போகம்பறை சிறைச்சாலைக் கைதிகள் 5 பேருந்துகளில் இன்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சக கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், இவர்கள் கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அழைத்துவரப்பட்ட அனைவரும் கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு இவர்களின் பாதுகாப்பிற்காக யாழ்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பலரும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.