கொரோனா வைரஸிற்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை புனே மருத்துவமனையில் ஆரம்பமாகியுள்ளது.
கடந்த மூன்று நாட்களில் 17 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவை தடுக்க ரஷ்ய சுகாதாரத்துறை ஸ்புட்னிக் என்ற பெயரில் தடுப்பூசியை தயாரித்துள்ளது.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக கொண்டு செயற்படும் ‘டொக்டர் ரெட்டி லேபரேட்டரீஸ்’ (Doctor Reddy Laboratories) நிறுவனம் தயாரிக்கிறது.





