கொரோனா தொற்றை கையாளும் விடயத்தில் பிரதமர் ஜஸ்டின் ரூடோ வெளிப்படைத் தன்மையாக இருக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடிய தொலைக்காட்சி மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் வெளிப்பட்டள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திசேவை தெரிவித்துள்ளது.
விசேடமாக கொரோனா தொற்றை கட்டப்படுத்தும் விடயத்தில் நிதிச் செலவீனம் தொடர்பில் வெளிப்படைத் தன்மையற்ற போக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் 2015ஆம் ஆண்டு பதவிக்கு வரும்போது பிரதமர் ரூடோ வெளிப்படை தன்மையை அனைத்து விடயங்களிலும் தமது அரசு கடைப்பிடிக்கும் என்று உறுதியளித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.