பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஈராக்கிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5-ந் திகதி தொடக்கம். 8-ந் திகதி வரை ஈராக்கில் பயணம் மேற்கொள்கிறார்.
தலைநகர் பாக்தாத், ஆபிரகாம், எர்பில் ஆகிய நகரங்களுக்கு அவர் செல்லவுள்ளார்.
ஈராக் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கத்தோலிக்க திருச்சபையின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்த பயணம், தொற்று நோயியல் சூழலில் உலகுக்கான ‘சமாதான செய்தி’யாக அமையும்” என்று வத்திக்கானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.